2008-10-21 18:12:00

இந்தி மொழியில் அகில இந்திய கத்தோலிக்கக் கல்விக் கொள்கை.21 அக்டோபர்.


2007 ஆம் ஆண்டுக்கான அகில இந்தியக் கத்தோலிக்கக் கொள்கை கையேட்டை இம்மாதம் 17 ஆம் தேதி இந்தியக் கத்தோலிக்க ஆயர்கள் குழுவின் தலைவர் பேராயர் ஸ்தனிஸ்லாஸ் பெர்னாண்டஸ் புது டெல்லியில் வெளியிட்டார் . ஒரிசா ஆயர்களுக்கான இரண்டு நாள் கருத்தரங்கு புது டெல்லியில் நடந்தது. டெல்லியின் பேராயர் வின்செண்ட் கொண்செஸ்ஸாவோ , காரித்தாஸ் அறக்கட்டளை அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் கத்தோலிக்க ஆயர்கள் குழுவின் செயலர்கள் குழுமியிருந்தனர் . முதல் பிரதி டெல்லிப் பேராயர் கொண்செஸ்ஸாவிடம் வழங்கப்பட்டது . கத்தோலிக்க ஆயர்கள் குழுவின் கல்வி மற்றும் கலாச்சாரத்துக்கான மன்றத்தின் செயற்பொறிச் செயலர் அருள் தந்தை சி. குரியாகோஸைப் இந்தக் கையேட்டைத் தயாரித்து வெளியிட்டதற்குப் பேராயர் ஸ்தனிஸ்லாஸ் பாராட்டியதோடு இந்தியாவின் தேசிய மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்நூல் இந்தியா முழுவதும் பரப்பப்பட்டு செயலாக்கம் பெறும் என நம்புவாதக் கூறினார். இந்நூலை இந்தி மொழியில் மொழியாக்கம் செய்த திரு. மரியானுஸ் டோப்போ , மற்றும் அருள் சகோதரி மீனாவையும் கத்தோலிக்க ஆயர்கள் குழுவின் செயலர் அருள் தந்தை சி. குரியாக்கோஸ் நன்றி கூறிப் பாராட்டினார் .








All the contents on this site are copyrighted ©.