2008-10-20 17:14:34

இன்றைய வளர்ச்சியின் எடுத்துக்காட்டாக இருக்கும் சாலைகள் சில தீமைகளின் இருப்பிடமாக உள்ளன - பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ


அக்.20,2008. இன்றைய வளர்ச்சியின் எடுத்துக்காட்டாகவும் அவைகளுக்கு உதவுவதாகவும் இருக்கும் சாலைகள் சில தீமைகளின் இருப்பிடமாகவும் உள்ளன என்று இலத்தீன் அமெரிக்காவின் சாலைகள் மற்றும் பயணங்கள் தொடர்புடைய மேய்ப்புப்பணி குறித்த கூட்டத்தில் பேராயர் அகுஸ்தீனோ மர்க்கெத்தோ உரையாற்றினார்.

நேற்று முதல் வருகிற வெள்ளிக் கிழமை வரை கொலம்பிய நாட்டு பொகோட்டாவில் இடம் பெறும் சாலைகள் மற்றும் பயணங்கள் தொடர்புடைய மேய்ப்புப்பணி குறித்த கூட்டத்தில் உரையாற்றிய, குடிபெயர்வோர்க்கான திருப்பீட அவையின் செயலர் பேராயர் மர்க்கெத்தோ, பொருட்களை எடுத்துச் செல்வதும் மக்களின் பயணமும் மிகப்பெரிய வேகத்தில் இடம் பெற்று வருகின்றன, ஆனால் இழப்புகளுக்கும் காரணமாகின்றன என்றார்.

இன்றைய உலகில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துக்களில் 12 இலட்சம் பேர் வரை உயிரிழந்து வருவதையும் எடுத்துரைத்த பேராயர், இதனால் நாட்டின் பொருளாதாரமும் வருங்காலமும் பாதிக்கப்படுகின்றன என்றார்.

சாலையோரங்கள் பெண்களால் விபச்சாரத்துக்கெனப் பயன்படுத்தப்படுவது தெருவாழ் சிறார்களின் உறைவிடமாய் இருத்தல் என்பவைகளைச் சுட்டிக் காட்டிய பேராயர் மர்க்கெத்தோ, இவையெல்லாம் ஏழ்மையின் விளைவாக உள்ளன என்பதையும் சுட்டிக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.