2008-10-19 20:33:55

ஒரிசாவின் கிறிஸ்தவர்கள் குடி உரிமை இல்லாத நிலை குறித்து ஐ.நா சபைக்கு அறிவிப்பு . 19 அக். 08.


ஒரிசா மாநில அரசு அகதிகள் முகாம்களை மூடி வருகிறது . ஆயிரக் கணக்கானோர் எங்கு செல்வதெனத் தெரியாது திகைப்போடு இருக்கிறார்கள். இந்நிலையை ஐக்கிய நாடுகள் சபைக்குத் தெரியப்படுத்தி இந்தியக் கிறிஸ்தவர்களுக்கு அகதிகள் என்ற நிலைமைக்கான தகுதி வழங்கி பாதுகாப்பு தருமாறும் , அவர்களுக்குத் தேவையான உணவு , தங்கும் வசதி ஆகியன வழங்கிடுமாறும் கோரப்பட்டுள்ளது . ஒரிசா மாநில அரசு, கிறிஸ்தவர்களை அகதிகள் முகாம்களிலிருந்து விரட்டிவிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வன்முறைகள் தொடர்வதாக ஆசியச் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது . எனவே அங்கு இனப் படுகொலை நடந்து வருகிறது .ஆசிய செய்தி நிறுவனத்துக்குச் செய்தி வழங்கிய ஒரிசாவின் மறைமாவட்டச் சமூக சேவை மையத்தைச் சேர்ந்த அருள் தந்தை மனோஜ் திகால், மூன்று அரசு முகாம்களில் ஒன்றான பாலிகுடா முகாம் இம்மாதம் 15 ஆம் தேதி மூடப்பட்டுவிட்டதாகக் கூறியுள்ளார் . அங்கிருந்த 900 பேர் வெளியே அனுப்பப்பட்டுள்ளனர் . பாதுகாப்பில்லாத சூழ்நிலையில் அவர்கள் எங்கே செல்ல முடியும் என்ற கேள்வி எழும்பியுள்ளது. வெறுமனே 10 கிலோ அரிசியோடு அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள். உடைமைகளை இழந்த அவர்கள் சொந்தக் கிராமங்களுக்குச் சென்றால் மீண்டும் இந்துக்களாக மாறி வாழ வேண்டிய நிலைமை வரும் என அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள் . மாநில அரசு எந்தவிதப் பாதுகாப்பும் வழங்கவில்லை. உயிருக்குப் பயந்து கொண்டிருக்கும் வேளையில் தீவிரவாதத்தைச் சேர்ந்த மகளிர் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் . கிறிஸ்தவர்கள் சொந்த மாநிலத்திலேயே அநாதைகளாகிவிட்டார்கள்.








All the contents on this site are copyrighted ©.