2008-10-17 20:29:20

திருப்பீடத்தில் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் பற்றிய திரைப்படம். 17அக்டோ.08.


வத்திக்கான் திருப்பீடத்தின் திருத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்தில் இவ்வாரம் வியாழன் மாலை முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் பற்றிய திரைப்படம் காட்டப்பட்டது . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அதுபோது அங்கிருந்தார் . திருத்தந்தை 2 ஆம் ஜான் பாலின் வாழ்க்கைச் சரிதத்தை அவரது 39 ஆண்டுக்கால செயலர் , பேராயர் ஸ்தனிஸ்லாஸ் ஷீவிஸ் , கரோலோடு ஒரு வாழ்வு என்ற தலைப்பிட்டு எழுதியிருந்தார் . அந்த நூலின் அடிப்படையில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது . 1978 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆம் தேதி கிராக்கோ நகரப்பேராயர் கரோல் ஓட்டில்யா திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டார் . தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களிடம் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் பேசிய முதல் உரையில் நான் தவறு செய்தால் என்னைத் திருத்துங்கள் என்று கூறியதாகத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அவரது உரையில் கூறினார் . முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் தேர்வு செய்யப்பட்டதன் 30 ஆம் ஆண்டு உரோமையில் கொண்டாடப்பட்டது . அவர் திருத்தந்தையாகப் பணியாற்றிய காலத்தை அவர் கூறிய பொன்மொழிகள் கிறிஸ்துவுக்குக் கதவைத் திறந்து விடுங்கள் . எதற்கும் அஞ்ச வேண்டாம் என்பன அலங்கரித்தன எனத் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் பாராட்டிப் பேசினார் .







All the contents on this site are copyrighted ©.