2008-10-17 20:01:02

உலக ஆயர்கள் மாமன்றத்தில் கர்தினால் விதயத்தில். 17 அக்டோபர் ,08.


இந்தியாவின் எர்ணாகுளம் அங்கமல்லியின் பேராயர் கர்தினால் வர்க்கி விதயத்தில் அவர் கருத்தை உலக ஆயர்கள் மாமன்றத்தில் எழுத்து வடிவில் பகிர்ந்து கொண்டார் . திருச்சபை வாழ்வதும் இயங்குவதும் நற்செய்தியை அறிவிப்பதற்கே என்பது திருச்சபையின் சட்டம் . நற்செய்தி அறிவிப்பதும் இறைமக்களை வழி நடத்துவதும் திருச்சபைப் பணிகளின் இரண்டு கண்களெனலாம் . இறைமக்களின் ஆன்மீக நலம் பேணாது விட்டால் அவர்கள் கேட்கும் இறைவாக்குப் பயன் தருவது எவ்வாறு எனக் கேள்வி ஒன்றை வைத்தார் . இறைவாக்கை அறிவிப்பது திருத்தந்தையரின் வழி காட்டுதலோடு நடப்பதாகும் . கீழைத் திருச்சபையினரின் ஆயர்கள் அவர்களுடைய இறைமக்களை வழி நடத்தத் திருச்சபைச் சட்டங்களும் 2 ஆம் வத்திக்கான் திருச்சங்கமும் அங்கீகாரம் அளித்துள்ளன . எனவே சீரோ மலபார் ரீதியிலான திருச்சபைக்கு இந்தியாவிலும் ஆப்பிரிக்காவிலும் புதிய மறை பரப்புத் தலங்கள் தரப்படவேண்டும் . புலம் பெயர்ந்து வருவோருக்கும் நற்செய்தி அறிவிக்க கத்தோலிக்கத் திருச்சபை அனுமதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மாமன்றத்தில் முன் வைத்தார் கர்தினால் வர்க்கி விதயத்தில் .








All the contents on this site are copyrighted ©.