2008-10-17 20:47:07

அறிவியல் தன்னைக் கடவுளாக நினைப்பது பேராபத்து . திருத்தந்தை .17அக். 08.


விசுவாசமும் பகுத்தறிவும் என்ற கருத்தரங்கு இவ்வியாழனன்று உரோமையில் நடந்தது . முந்நாள் திருத்தந்தை 2 ஆம் ஜான் பால் 1998 இல் இதே தலைப்பில் சுற்றறிக்கை வெளியிட்டிருந்தார் . கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் திருத்தந்தையை இவ்வியாழனன்று சந்தித்தனர் . அதுபோது பேசிய திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட், அச் சுற்றறிக்கை அறிவின் ஆற்றலைத் தெளிவாக வெளிப்படுத்துகிறது . தற்காலத்தில் அறிவியல் இறுதியான , முடிவான உண்மைகளைப் பற்றி ஆராய்வதில்லை என்று கூறினார் திருத்தந்தை . இயற்கையில் புதைந்துள்ள இரகசியங்களையே தேடுகிறது . இயற்கையையே உருவாக்க முயற்சி செய்கிறது . திருச்சபை ஒரு நாளும் அறிவியலுக்கு அஞ்சியதில்லை . அறிவியல் மனித வாழ்வுக்குப் பயனுள்ளவற்றை ஆராய்வதில்லை . கடவுளாகத் தன்னை அறிவியல் கருதுவது மனுக்குலத்துக்குப் பேராபத்தைத் தரக்கூடியது என திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் கூறினார் .








All the contents on this site are copyrighted ©.