2008-10-15 18:46:56

புனித மார்கரீத் மேரி அலகோக் .துறவினி கி.பி. 1647– 1690 .


இவருடைய விழா அக்டோபர் 16 இல் கொண்டாடப்படுகிறது.

இவர் பரேலேமோனியாவில் இருந்த மினவின துறவற சபையைச் சேர்ந்த அருள் சகோதரி . தொடக்க முதல் திவ்ய நற்கருணை பக்தியில் சிறந்து விளங்கினார் . ஒரு நாள் திவ்ய நற்கருணையின் முன் செபித்துக்கொண்டிருந்தபோது ஆண்டவர் இயேசு மார்க்கரீத்து மரியாவுக்குக நேரில் காட்சியாகத் தோன்றினார் . அவரது இதயத்தைத் திறந்து காட்டி இதோ பார் , மனிதர்களை அணைகடந்த விதமாக அன்பு செய்யும் இதயம் , என்று திரும்பத் திரும்பக் கூறினார் . 13 மாதங்கள் வரை இந்தக் காட்சியைத் பல் வேறு சமயங்களில் தொடர்ந்து காணும் பேறு மார்க்கரீத்து மரியாவுக்குக் கிடைத்தது. இயேசுவின் திரு இதயம் வற்றாத தெய்வீக அன்பின் வெளி அடையாளம் என்பதைத் தெளிவாக மார்க்கரீத்து உணர்ந்தார் . மற்றவர்களிடம் அவர் அடைந்த சிறுமைகள் , பழிச்சொல் , அனைத்தையும் பாவப்பரிகாரமாகத் இயேசுவின் திரு இதயத்திற்கு ஒப்புக் கொடுத்தார் . மாதத்தின் முதல் வியாழன் அன்று ஆலயத்தில் திருமணி ஆராதனை , வெள்ளிக்கிழமை பரிகார நன்மை முதலிய பக்தி முயற்சிகளையும் திரு இதய ஆண்டவர் மார்க்கரீத்துக்குக் கற்பித்து வந்தார் . இவர் கண்ட காட்சிகளும் ,தொடங்கிய பக்தி முயற்சிகளும் சரியானவையே என இயேசு சபையைச் சேர்ந்த இவருடைய ஆன்மகுரு புனித கிளாடு கொலம்பியர் தெளிவுபடுத்தினார். மார்க்கரீத்து மேரி அலக்கோக் அவரது 43 வயதில் இறைவனைத் தவிர வேறொன்றும் எனக்குத் தேவையில்லை, இயேசுவின் இதயத்திடம் என்னை ஒப்படைக்கிறேன் என்ற இறுதிச் சொற்களுடன் இறைவனடி சேர்ந்தார் .

நம் சிந்தனைக்கு . பாவத்தின் நச்சுத்தன்மையை நாம் உணர வேண்டும் . இறையன்பு பறைசாற்றப்பட வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.