2008-10-15 18:39:25

திருத்தந்தையின் புதன் மறைபோதகம் . 15 அக். 08 .


இன்றைய புதன் மறைபோதகம் தூய பேதுரு பசிலிக்கா வளாகத்தில் நடந்தது . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் இன்றும் தொடர்ந்து திருத்தூதர் தூய பவுல் அடிகளார்பற்றி மறைபோதகம் வழங்கினார் . இன்று திருத்தூதர் பவுல் திருச்சபையைப் பற்றிக் கூறியுள்ளவை பற்றிப் பேசினார் . அவரது மனமாற்றத்துக்கு முன்னர் பவுல் அடிகளார் துன்புறுத்திய கிறிஸ்தவக் குடும்பம்தான் திருச்சபை . உள்ளூர் கிறிஸ்தவ ஒன்றியங்களுக்கும் உலகம் தழுலிய கிறிஸ்தவ வாழ்வைக் கொண்ட குடும்பங்களுக்கும் திருச்சபை என்று பெயரிட்டு அழைக்கிறார் பவுல் அடிகளார் . தூய பவுல் அடிகளாருக்கு திருச்சபையின் இதயமாக இருப்பது இயேசுக்கிறிஸ்துவும் அவரது நற்செய்தியுமாகும் . திருத்தூதர் பவுல் ஆற்றிய மறைப் பணி முழுவதும் ஆண்டவர் இயேசுவின் இறப்பு உயிர்ப்பு பற்றிய பாஸ்கா மறை உண்மைகளாகும் . பவுல் அடிகளார் கிறிஸ்துவிலும் தூய ஆவியிலும் நம்பிக்கை கொண்ட புதிய கிறிஸ்தவக் குழுமங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார் . இவ்வாறு கடவுளின் வார்த்தையால் இணைக்கப்பட்ட மக்கள் சேர்ந்து அமைக்கும் கூட்டு உறவு திருச்சபை என்று அழைக்கப்படுகிறது . பவுல் அடிகளாருக்கு திருச்சபை என்பது கிறிஸ்துவின் உடல் . உயிரோட்டமுள்ள உடல் இது . ஆன்மீகத்தை மையமாகக் கொண்ட பல்வேறு திருப்பணிகளைக் கொண்ட இயேசுவின் உடல் இது .திருச்சபை பற்றிய திருத்தூதரின் போதனைதகள் வேறுபட்டதும் கருத்தாழம் மிக்க செல்வமும் ஆகும் .திருத்தூதர் பவுல் நாமெல்லாம் திருச்சபையைப் புரிந்து கொள்ளுமாறும் அதை ஆழமாக அன்பு செய்யுமாறும் இறைப்பற்றிலும் பிறரன்பிலும் திருச்சபையைக் கட்டி எழுப்புமாறும் அறைகூவல் விடுக்கிறார் என மறைபோதகம் வழங்கி வந்திருந்த அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .








All the contents on this site are copyrighted ©.