2008-10-10 20:52:22

துருக்கியில் ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்கள் கருத்தரங்கு .101008


திருத்தூதர் பவுல் அடிகளாரின் ஞாபகமாக ஆர்த்தோடாக்ஸ் கிறிஸ்தவர்கள் துருக்கியில் இவ்வெள்ளி ஒன்று கூடினார்கள் . திருத்தூதர் பவுல் பிறந்த 2000 ஆம் ஆண்டைச் சிறப்புச் செய்ய கிறிஸ்தவ சமய ஒன்றிப்புப் பிதாப்பிதாவின் இருப்பிடத்தில் துருக்கியில் ஒன்றுகூடுகிறார்கள் . மாஸ்கோவிலிருந்து பிதாப்பிதா 2 ஆம் அலெக்ஸ் இந்தக் கருத்தரங்கில் கலந்து கொள்கிறார் . ஆர்த்தோடாக்ஸ் திருச்சபையின் மிக முக்கியத் தலைவர்கள் அங்கு ஒன்று கூடுகிறார்கள் . கிறிஸ்தவ ஒன்றிப்புப் பிதாப்பிதா முதலாம் பர்த்தலோமேயு , அலெக்சாந்திரியாவின் 2 ஆம் தியோடோரோஸ், சிரியா நாட்டின் அந்தியோக்கியாவிலிருந்து 4 ஆவது இக்னேஷியஸ் மற்றும் எருசலேத்தின் 3 ஆவது தியோபிலஸ் ஆகியோர் வருகை தருகிறார்கள் . அங்கு 2 நாள் கருத்தரங்கும் கொண்டாட்டமும் நடக்கிறது . ஜெர்மன் நாட்டு கொலோன் நகர மேயர் பிரிட்ஜ் ஷ்ராம், துருக்கிப் பிரதமர் தயிப் எர்டோகனுக்கு எழுதிய மடலில் பவுல் பிறந்த தார்சு நகரில் அவருக்கு நினைவாலயம் எழுப்புமாறும் அதற்குத் தேவையான பொருளுதவியும் , ஒத்துழைப்பும் தருவாதாகவும் தெரிவித்துள்ளார் .








All the contents on this site are copyrighted ©.