2008-10-10 20:07:20

கென்யா நாட்டில் பொருளாதார நிலைமைபற்றி திருச்சபைத்தலைவர்கள்.101008.


தேசியப் பொருளாதாரச் சிக்கலில் கென்யா தவிப்பதாக அங்குள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் கூறியுள்ளார்கள் . அந்நாட்டின் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மறையின் நீதி மற்றும் அமைதிக்கான மன்றம் கென்யாவின் பொருளாதாரம் பற்றிக் கருத்தரங்கு நடத்தியது. கென்யாவின் ஆயர்குழு உறுப்பினர்கள் அதில் கலந்து கொண்டிருந்தனர் . அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்துள்ள சகோதர சகோதரிகளை நினைத்து வருத்தம் தெரிவித்துள்ளார்கள். இடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களில் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதால் இன்னும் உதவி தேவைப்படுவதாகக் கூறியுள்ளனர் . புலம் பெயர்ந்தோர் அவர்கள் சொந்த வீடுகளுக்குச் சென்று பாதுகாப்பாக வாழ அரசு ஆவன செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர் . அந்நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை , வேலையில்லாத் திண்டாட்டம் , இலஞ்ச ஊழல் , பாதுகாப்பு இல்லாத நிலைமை , பள்ளிகளில் வன்முறை , சுற்றுச் சூழல் மோசமாகி வருதல் ஆகியன பற்றியும் கென்யாவின் ஆயர்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது .








All the contents on this site are copyrighted ©.