2008-10-10 19:48:00

அமைதிக்கான நோபல் பரிசு 2008. 10அக்டோபர் 08.


பின்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் மார்ட்டி ஆதிசாரி இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுகிறார் . இவர் ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரதிநிதியாக கொசாவோ நாட்டுப் பிரச்சனைக்குத் தீர்வு காண உதவியாக இருந்தார் . 30 ஆண்டுகளாகவே பல நாடுகளில் பிரச்சனைகளைத் தீர்க்க உதவியாக இருந்துள்ளதாகவும் , உலகில் கூடுதல் அமைதிக்கு அவர் ஆற்றிய சேவையைப் பாராட்டியும் ஆஸ்லோவின் நோபல் பரிசுக் கழகம் அவருக்குப் பாராட்டுத் தெரிவித்துள்ளது. நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட 197 பேரிலிருந்து இவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . 5 பேர் கொண்ட இரகசியக் குழு அனைத்து நபர்களையும் ஆராய்ந்து மார்ட்டி ஆதிசாரியை நோபல் பரிசுக்குத் தகுதியுள்ளவரென முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. மார்ட்டி ஆதிசாரிக்கு ஒரு தங்கப்பதக்கமும் , பட்டயச்சான்றிதழ் ஒன்றும் , 14,20,000 டாலர்களும் பரிசாகத் தரப்படுகிறது .








All the contents on this site are copyrighted ©.