2008-10-09 15:33:00

ஒரிசாவில் கிறிஸ்தவர்கள் மற்றும் இந்துக்களிடையே ஒன்றிப்பை வளர்ப்பதற்கு ஆயர்களும் எதிர்க் கட்சிகளும் முயற்சி


அக்09,2008. ஒரிசாவில் இடம் பெறும் மதவன்முறைகள் முடிவுக்கு வரவும், மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகள் ஊக்குவிக்கப்படவுமென ஒன்றினைந்த அறிக்கை ஒன்றை இந்திய இந்து மற்றும் கத்தோலிக்கத் தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.

டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்சாவோ, ஒரிசாவின் புவனேஸவர் பேராயர் இரபேல் சீனத் ஆகியோர் இணைந்து எதிர்க் கட்சித் தலைவர் லல்கிருஷ்ணா அத்வானியை அவரின் இல்லத்தில் சந்தித்த பின் மூவரும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மதங்களிடையேயான கருத்துப்பரிமாற்றங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்ட்டுள்ளது.

இந்துமதத்தலைவர் சுவாமி சித்தானந்த் சரஸ்வதியால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பின் போது ஒரிசா வன்முறைகளில் கத்தோலிக்க அருட்கன்னிகை ஒருவர் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டது குறித்து எல்.கே.அத்வானி தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஒரிசாவில் மதவன்முறையில் எரிக்கப்பட்ட ஒரு கிராமத்தை மீண்டும் கட்டி எழுப்பித்தர இச்சந்திப்பின் போது சுவாமி சித்தானந்த் சரஸ்வதி உறுதி வழங்கியதாகவும் மேலும் அக்கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.