ஆயர்கள் குழுவின் கருத்தரங்கு – ஒரு பார்வை . 061008
அகில உலக ஆயர்கள் குழுவின் 12 ஆவது கருத்தரங்கு உரோமையில் அக்டோபர் மாதம் 05 தேதியிலிருந்து
26 தேதிவரை நடந்து கொண்டிருக்கிறது . இந்தக் கருத்தரங்கு நிகழ்வுகளை திருத்தந்தை ஆறாம்
பவுல் 1965 ஆம் ஆண்டு அமல் படுத்தினார். இதுபற்றி வத்திக்கான் திருப்பீடம் இம்மாதம் 03
ஆம் தேதி செய்தி வெளியிட்டது .கத்தோலிக்க ஆயர்கள் குழு திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்குவதற்காக
அமைக்கப்படுகிறது. திருச்சபையை ஆளுவதில் இவர்கள் திருத்தந்தைக்கு ஆலோசனை வழங்குவார்கள்
. ஆயர்கள் குழுமம் என்பது நிரந்தரமாக இருக்கும் ஒன்று . ஆனால் குறிப்பிட்ட சில முக்கிய
கொள்கைகளோ, திட்டங்களோ, கருத்துக்களோ பற்றி தெளிவாகத் தெரிந்துகொள்ள திருத்தந்தை இந்தக்
கருத்தரங்கைக் கூட்டுவார் . இப்பொழுது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆயர்கள் வழியாக இந்த ஆண்டு
திருச்சபையின் வாழ்விலும் நற்செய்தி அறிவிப்பிலும் இறைவாக்கு என்பது பற்றி ஆலோசனை பெற்று
அதை திருத்தந்தை கவனத்தில் கொள்ளும்போது திருச்சபையின் தலையாய உரோமை ஆயர் மற்ற ஆயர்களைக்
கலந்து திருப்பணி செய்வது தெளிவாகத் தெரிகிறது . இந்த ஆயர்கள் குழுவின் பரிந்துரை கிறிஸ்தவ
ஒற்றுமைக்காக நிகழும் ஆயர்குழு போன்றதே என்றாலும் அதற்கு சரியாக இணையானதல்ல என வரையறுக்கப்படுகிறது
. இப்பொழுது நடக்கும் ஆயர்கள் கருத்தரங்கு 12 ஆவது கருத்தரங்கு எனக்கூறப்பட்டாலும் ,