2008-10-02 20:12:47

மத்திய ஆசிய நாடுகளின் ஆயர்கள் திருத்தந்தையைச் சந்தித்தனர்.02அக்.09.


அத் லீமினா சந்திப்புக்காக வந்த மத்திய ஆசிய நாடுகளின் ஆயர்கள் திருத்தந்தையைச் சந்தித்து ஆசி பெற்றனர். தூய பேதுருவின் வழித்தோன்றலாகிய திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் ஆயர்களைப் பாசத்தோடு வரவேற்று இடைவிடாத அவரது செப மன்றாட்டுக்களை ஆயர்களுக்கும் அவர்கள் நாட்டு மக்களுக்கும் காணிக்கையாக்குவதாகக் கூறினார் . உஸ்பெசிக்கிஸ்தான் , கிரிகிஸ்தான் , ததிகிஸ்தான் , துர்க்மெனிஸ்தான் , கசக்கிஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளின் ஆயர்கள் வழக்கத்தில் உள்ள அத்லீமினாப்படி திருத்தந்தையை அக்டோபர் 2 நண்பகலில் சந்தித்து மகிழ்ந்தனர் . கடவுள் பற்றற்ற கம்யூனிச ஆட்சிக்காலத்தில் இறைமக்கள் அந்நாடுகளில் பல துயரங்களுக்கு உள்ளாகியுள்ளனர் . அவர்கள் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. அதற்காக உற்சாகம் இழக்க வேண்டாம் எனக் கூறினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.

திருச்சபையின் தொடக்கத்தில் ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட அன்பினால் கிறிஸ்தவர்கள் பல துன்பங்களை ஏற்றுக் கொண்டார்கள் . மகிழ்ச்சியோடு நற்செய்தியை அறிவித்தார்கள் .இறை இயேசு நம்மை வழி நடத்துவதால் அஞ்சாது இறைவார்த்தையை இறை மக்கள் மனத்தில் பதியச் செய்வோம் எனத் திருத்தந்தை ஆயர்களுக்கு உற்சாகமூட்டி ஆசி வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.