2008-10-02 20:35:22

நேப்பிள்ஸின் கர்தினால் ரஷ்யாவின் ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதாவைச் சந்தித்தார்.021008 .


இத்தாலியின் நேப்பிள்ஸ் கர்தினால் கிரஷென்சியோ சேப்பே ரஷ்ய ஆர்த்தோடாக்ஸ் பிதாப்பிதா இரண்டாம் அலெக்ஸியைச் சந்தித்தார் . இம்மாதம் முதல் தேதி கர்தினால் கிரஷென்சியோவும் மற்றும் இத்தாலிய ஆயர்குழுவின் கிறிஸ்தவ ஒன்றிப்பு அமைப்பின் தலைவர் ஆயர் வின்செண்சோ பாலியா , தூய எஜிதியோ அமைப்பின் தலைவர் அந்திரேயா ரெக்கார்டி ஆகியோர் பிதாப்பிதாவின் அழைப்பின் பேரில் மாஸ்கோ சென்று அவரைச் சந்தித்தனர் . திருத்தந்தை 16 ஆம் பெனடிக்டின் மடல் ஒனறையும் நேப்பிள்ஸ் நகரின் மறைசாட்சி புனித ஜனுவாரியுஸின் புனிதப் பொருள் ஒனறையும் 2 ஆம் அலெக்ஸிடம் கர்தினால் கொடுத்தார் . கிறிஸ்தவ நற்செய்தி அறிவிப்புப் பணியில் இரு திருச்சபைகளும் இணைந்தே செயல்பட பிதாப்பிதாவும் , கர்தினால் கிரஷென்சியோ சேப்பேயும் உறுதிபூண்டுள்ளனர் . ஐரோப்பாவின் ஆன்மீகத்திலிருந்து எதிர்காலத்துக்கு நம்பிக்கையும் , இன்றைய உலகில் துன்புறுவோர்க்கு பிறரன்பும் ஆறாக ஓடும் எனக் கர்தினால் கிரஷென்சியோ கூறினார் .








All the contents on this site are copyrighted ©.