2008-09-30 15:38:15

வத்திக்கானின் பாதுகாப்புப்படை இன்டர்போலுடன் சேர்ந்து வேலை செய்யத் திட்டமிட்டுள்ளது.


செப்.30,2008. பயங்கரவாதத்திற்கு எதிராகச் செயல்படுவதற்கென இரு புதிய பிரிவுகளை இவ்வாண்டில் உருவாக்கியுள்ள வத்திக்கானின் பாதுகாப்புப்படை, இன்டர்போல் என்ற உலகின் மிக்பெரிய காவல்துறை அமைப்போடு சேர்ந்து வேலை செய்யத்திட்டமிட்டுள்ளது.

இரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்கில் வருகிற அக்டோபர் பத்தாம் தேதிக்கு முன்னர் இணையவிருப்பதாக வத்திக்கானின் பாதுகாப்புப்படை இயக்குனர் தொமெனிக்கோ ஜானி அறிவித்தார்.

அண்மை ஆண்டுகளில் பயங்கரவாதக் குழுக்கள் வத்திக்கான் மற்றும் திருத்தந்தை 16ம் பெனடிக்டுக்கு அச்சுறுத்தல் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

130 பேரைக் கொண்ட வத்திக்கான் பாதுகாப்புப்படையானது, சுவிஸ் கார்ட்ஸ் எனப்படும் திருத்தந்தையின் மெய்க்காப்பாளர்களுடன் சேர்ந்து பணிசெய்து வருகின்றது.

186 உறுப்பு நாடுகளுடன் இயங்கும் இன்டர்போல் அமைப்பானது, 1923 இல் உருவாக்கப்பட்டது. சர்வதேச அளவில் குற்றங்களைத் தடுப்பதற்கும் அவற்றுக்கு எதிராகப் போராடுவதற்குமென உருவாக்கப்பட்டது.

மிக்கேல் அதிதூதர் வத்திக்கான் பாதுகாப்புப்படையின் பாதுகாவலர். இவ்விழாவான நேற்று திருத்தந்தை இப்படையினரின் பணிக்கு நன்றியும் தெரிவித்தார்.

 








All the contents on this site are copyrighted ©.