2008-09-30 15:36:21

புதிய தொழிற்நுட்பம், புதிய உறவுகள்- மதிப்புக் கலாச்சாரத்தையும், உரையாடலையும் நட்புறவையும் ஊக்குவித்தல்- 43வது உலக சமூகத்தொடர்பு தினம்.


செப்.30,2008. புதிய தொழிற்நுட்பம், புதிய உறவுகள் - மதிப்புக் கலாச்சாரத்தையும், உரையாடலையும் நட்புறவையும் ஊக்குவித்தல் என்ற தலைப்பை 43வது உலக சமூகத்தொடர்பு தினத்தின் கருப்பொருளாகத் தேர்தெடுத்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இச்செய்தியை நேற்று வெளியிட்ட திருப்பீட சமூகத்தொடர்புத் துறைத் தலைவர் பேராயர் கிளவ்தியோ மரிய ச்செலி, சமூகத்தொடர்புத் துறையில் வேலை செய்பவர்கள், புதிய தொழிற்நுட்பத்தைப் பொது நலனுக்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை நினைவுபடுத்துவதாக இத்தலைப்பு இருக்கின்றது என்றார்.

சமூகத்தொடர்பு சாதனங்கள், உலகில் உரையாடலையும் நம்பிக்கையையும் வளர்க்கும் என்பதில் திருத்தந்தை கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் இத்தலைப்பு பிரதிபலிப்பதாய் இருக்கின்றது என்றும் பேராயர் ச்செலி கூறினார்.

43வது உலக சமூகத்தொடர்பு தினம், 2009ஆம் ஆண்டு மே,30ம் தேதி சிறப்பிக்கப்படும். இத்தினத்திற்கான திருத்தந்தையின் செய்தி, வழக்கமாக ஜனவரி 24ம் தேதி வெளியிடப்படும். அன்று, சமூகத்தொடர்புத் துறையினருக்குப் பாதுகாவலராகிய புனித பிரான்சிஸ் தெ சேல்ஸின் திருவிழாவாகும். உலக சமூகத்தொடர்பு தினத்திற்கான தலைப்பானது மிக்கேல், கபிரியேல், இரபேல் அதிதூதர்கள் விழாவன்று வெளியிடப்படுகின்றது.








All the contents on this site are copyrighted ©.