2008-09-30 15:37:16

நெருக்கடிகள், இராணுவ நடவடிக்கையால் அல்ல, மாறாக பேச்சுவார்த்தையால் தீர்க்கப்பட வேண்டும் – பேராயர் செலஸ்தினோ மிலியோரே.


செப்.30,2008. மக்களிடையே ஏற்படும் பிணக்குகளைத் தீர்ப்பதற்குப் பயன்படுத்தப்படும் வனமுறைச் செயல்கள் எப்பொழுதும் மனித சமுதாயத்திற்குத் தோல்வியையே கொண்டு வந்துள்ளது என்று பேராயர் செலஸ்தினோ மிலியோரே கூறினார்.

நியுயார்க் ஐ.நா.தலைமையகத்தில் நடைபெறும் 63வது பொது அவையில் பொது விவாதத்தின் போது நேற்று உரையாற்றிய, ஐ.நா.வுக்கான திருப்பீடன் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் மிலியோரே, நாடுகள் பிரச்சனைகளை எதிர்நோக்கும் போது அவைகளைப் பாதுகாப்பதற்கான பொறுப்புணர்வு, இராணுவ நடவடிக்கைகள் மூலம் காட்டப்படக் கூடாது என்றார்.

அதேசமயம், சர்வதேச சமுதாயம் ஒன்றிணைந்து வந்து திறந்த மனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, நன்னெறிச் சட்டத்திற்கு ஆதரவு அளித்து பொது நலனுக்கான வழிகளைத் தேட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இயற்கையாலும் மனிதனாலும் ஏற்படுத்தப்படும் பேரிடர்கள், பொருளாதாரச் சரிவுகள், நிதி நெருக்கடிகள், உணவுப் பொருட்கள், எரிபொருள்களின் விலைவாசி ஏற்றம், வெப்பநிலை மாற்றம், உள்நாட்டுச் சண்டைகள், பதட்டநிலைகல் என எண்ணற்ற சவால்களை இன்றைய உலகம் எதிர்நோக்குகின்றது என்றுரைத்த பேராயர் மிலியோரே, இவற்றிக்கானக் காரணங்களையும் பொதுவான தீர்வுகளையும் காண்பதற்கு பொது அவைக்கு இருக்கின்ற கடமையையும் சுட்டிக்காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.