2008-09-30 15:41:14

சிறைக் கைதிகளுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்த பிலிப்பைன்ஸ் ஆயர்கள் அழைப்பு


செப்.30,2008. பிலிப்பைன்ஸ் சிறைகளில் பெருமெண்ணிக்கையில் இருக்கின்ற கைதிகளுக்குத் தோழமையுணர்வு காட்டி அவர்களுக்கு மறுவாழ்வுத் திட்டங்களை செயல்படுத்துமாறு அந்நாட்டு ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பிலிப்பைன்ஸ் சிறைகளில் நெருக்கடிகளை எதிரா நோக்கும் ஒரு இலட்சத்து எண்பதாயிரத்துக்கு மேற்பட்ட கைதிகளின் நிலைமைகளை மேம்படுத்துவதற்கு குற்றவியல் நீதித்துறை அமைப்பை திறமையுள்ளதாக ஆக்குமாறு ஆயர்கள் அரசை வலியுறுத்தியுள்ளனர்.

அண்மை ஆண்டுகளில் கைதிகளின் எண்ணிக்கை அதிகமாகியுல்ளதைக் குறிப்பிட்ட பிலிப்பைன்ஸ் ஆயர் பேரவையின் சிறைப்பணி ஆணையத் தலைவர் ஆயர் பேத்ரோ அரிகோ, அந்நாட்டு சிறைகளின் மோசமான நிலைமைகளும் வழக்கு விசாரணைகள் நீண்ட காலம் தள்ளிப்போடப்படுவதும் சட்ட ரீதியான பிரதிநிதித்துவம் இல்லாமையும் கைதிகள் மீண்டும் சமுதாய வாழ்வில் இணைவதற்குத் தடைகளாய் இருக்கின்றன என்றார்.

பிலிப்பைன்ஸ் திருச்சபை வருகிற அக்டோபர் 20ம் தேதியிலிருந்து ஒரு வாரத்திற்கு சிரை வாரத்தைக் கடைபிடிக்கின்றது.








All the contents on this site are copyrighted ©.