2008-09-26 20:40:33

வியட்நாம் நாடு மதச்சுதந்திரத்தை மறுப்பதில் முதலிடம் .26 செப்.-08


வியட்நாம் சமயச் சுதந்திரத்தை மறுத்து வருகிறது . அமெரிக்காவின் மதச்சுதந்திரம் பற்றி உலகெங்கும் ஆய்வு நடத்தும் மன்றம் சென்ற ஆண்டு அது மதங்களுக்குத் தடை விதிக்கும் கொள்கையைத் தளர்த்தி முன்னேறியுள்ளதாக அமெரிக்க ஆய்வு மன்றம் கூறியிருந்தது . தற்போதுள்ள நிலையில் உலகிலேயே மதச் சுதந்திரத்தை மறுப்பதில் முதல் இடத்தில் இருப்பது வியட்நாம்தான் எனத் தெரிவித்துள்ளது . 5000 க்கும் அதிகமானோர் ஹோ சீ மின் நகரில் திரண்டெழுந்து ஹனாயில் நடக்கும் மதச் சுதந்திரத்தை அடக்கும் போக்குக்கு கண்டனம் தெரிவித்தனர் . சைகான் ஆயர் ஜான் பாப்டிஸ்டே கத்தோலிக்கருக்கு இழைக்கப்படும் வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுக்குமாறு கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டார் . ஹனாயில் உள்ள கம்யூனிசக் கட்சியினர் ஹனாய் ஆயர் ஜோசப் கோ குவாங் கீயட் க்கு எதிராக கூக்குரலிட்டு ஆரவாரம் செய்துள்ளனர் .








All the contents on this site are copyrighted ©.