2008-09-26 20:22:25

ஐ.நா. சபையினர் உயர் சிந்தனை கொள்ள வேண்டும் என்கிறார் கர்தினால் மாராடீகா .

26 செப். 08 .


முதன்மை உலகென்றும் மூன்றாவது உலகென்றும் தரம் பிரித்துக் கூறுபோடுவதைத் தவிர்க்க வேண்டும் என நியூயார்க்கில் நடந்து வரும் ஐ.நா சபைக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார் அகில உலகக் காரித்தாஸ் நிறுவனத் தலைவர் கர்தினால் ஆஸ்கர் ரொட்ரீகுவஸ் மாராடீகா . அகில உலக வளர்ச்சிக்கும் மாற்றத்துக்குமான உச்சக் கருத்தரங்கை ஐ.நா சபை நடத்திக்கொண்டிருக்கிறது . ஐ.நாவில் உறுப்பினர்கள் அல்லாத ஐவருக்கு ஐ.நா கருத்தரங்குக்கு வர சிறப்பு அழைப்பு விடுத்திருந்தது . அங்கு இவ்வெள்ளி அன்று உரை நிகழ்த்திய கர்தினால் மாராடீகா ஐ.நாவின் வளர்ச்சித் திட்டங்களை உறுதிமொழிப்படி 2015 ஆம் ஆண்டுக்குள் துணிவோடு நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார் . திட்டங்கள் காலதாமதமாகச் செயல்படுவதற்கு திறமையான அரசுத் தலைவர்கள் இல்லாததே காரணம் எனத் துணிவோடு கூறினார் கர்தினால் மாராடீகா .








All the contents on this site are copyrighted ©.