2008-09-25 20:30:24

கிறிஸ்தவர்களுக்கு இழைக்கப்படும் தாக்குதல் பற்றி அமெரிக்கா கவலை .250908.


சென்னையில் இயங்கும் அமெரிக்கிய ஐக்கிய நாடுகள் தூதரகத்தின் வேண்டுகோளுக்கிணங்க அங்குள்ள பிரமுகர்கள் பங்களூர் பேராயத்தலைவர்களை இந்த வியாழக்கிழமை சந்தித்தினர் . சந்திப்பின்போது வழங்கப்பட்ட விருந்துக்கு டாக்டர் சங்லீமா , ஓய்வுபெற்ற நீதிபதி சல்தானா , ஓய்வு டி.ஜி .கொலாசோ , இந்தியக் கத்தோலிக்க தொடர்பகத் தலைவர் திரு . அடால்ப் வாஷிங்டன் மற்றும் பல முக்கியப் பிரமுகர்கள் வந்திருந்தனர் . அமெரிக்க ஐக்கிய அரசின் சென்னைக் கிளையிலிருந்து உதவிக் கான்சல் திரு . பால் ஏ . கின்ஷா , அலுவலர் ஸ்காட் ஏ. உடாட் , பொருளாதார நிபுணர் திரு . ஜார்ஜ் மாத்யூ ஆகியோர் வந்திருந்தனர் . ஒரிசா பற்றிய புலன் விசாரணைச் செய்திகள் அமெரிக்க அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தூதரகச் செயலர் தெரிவித்தார். இந்தியாவில் வன்முறைகள் நடக்கும் மற்ற இடங்களில் புலன் விசாரணை நடந்து வருவதாகவும், செய்திகள் அவ்வப்போது வாஷிங்டனுக்கு அனுப்பப்படுவதாகவும் தூதரகத்தினர் தெரிவித்தனர் .








All the contents on this site are copyrighted ©.