2008-09-25 19:04:47

காண்டர்பரி பேராயர் லூர்து திருத்தலத்தில் திருப்பலி நிகழ்த்தினார் .250908.


இங்கிலாந்து நாட்டின் காண்டர்பரிப் பேராயர் டாக்டர் ரோவன் வில்லியம்ஸ் ஆங்கிலிக்கன் கிறிஸ்தவ சபைப் பேராயர் . புரோட்டஸ்டண்ட் என்ற பிரிவினைக் கிறிஸ்துவ மதத்தைத் தொடங்கி , பாதுகாத்து வரும் ஆங்கில மகாராணியோ மன்னரோ இவரைப் பேராயராக நியமனம் செய்வர் . புரோட்டஸ்டாண்டு சமயம் கத்தோலிக்கத் திருச்சபைக்கு எதிராகக் கிளம்பிய பிரிவினைச் சபையாகும் . ஆங்கிலிக்கன் சபையின் பேராயர் ஒருவர் லூர்து நகர் செல்வதும் அங்கே திருப்பலி நிகழ்த்துவதும் வரலாற்றிலேயே இதுவே முதல் முறையாகும் . புரோட்டஸ்டண்ட் சமயம் மறுமலர்ச்சி இயக்கமாகக் கத்தோலிக்கத் திருச்சபையில் இருந்துவரும் அன்னை மரியாள் வணக்கம் , புனிதர்களின் வணக்கம் , மற்றும் தரிசனங்கள் ஆகியவற்றை எதிர்த்து வருகின்ற சமயமாகும் . எனவே டாக்டர் ரோவன் வில்லியம்ஸ்ஸின் லூர்து நகர்ப் பயணம் கத்தோலிக்கத் திருச்சபையில் வழக்கத்தில் இருக்கும் வழிபாட்டுப் பழக்கங்களை ஏற்றுக் கொள்வதாகும் . அங்கு நிகழ்த்திய மறையுரையில் புனிதமான லூர்து நகருக்குச் செல்பவர்கள் புதுப்பிக்கப்பட்டு தூய ஆவியானவரின் அருங்கொடைகளால் நிரப்பப்பட்டு செல்லும் இடமெல்லாம் இயேசுவைத் தாங்கிச்சென்று பெற்ற பெரு மகிழ்ச்சியைப் பிறரோடு பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார் ரோவன் வில்லியம்ஸ் .








All the contents on this site are copyrighted ©.