2008-09-19 20:40:10

தீவிரவாதிகள் ஜபல்பூர் பேராலயத்துக்குத் தீ வைத்தனர் . 19 செப்.-08 .


தர்ம் இரக்ச சேனா என்ற பெயர் கொண்ட இந்துத் தீவிரவாதிகள் ஜபல்பூர் மறைமாவட்டத்தின் கத்தோலிக்கப் பேராலயத்துக்குத் தீ வைத்தனர் . செப். 18 ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு இது நடந்துள்ளது . இந்தத் தேவாலயம் 1997 , மேத்திங்கள் 22 இல் நில நடுக்கம் காரணமாகப் பழுதுபட்டது . அதனால் மீண்டும் புதிதாகக் கட்டப்பட்டது . இவ்வாலயம் பெரிய வளாகத்தின் நடுவில் உள்ளது . அதைச் சுற்றிலும் பல கிறிஸ்தவ நிறுவனங்களும் வீடுகளும் உள்ளன . ஜபல்பூர் ஆலயம் எரிந்தது பற்றி மாவட்ட அதிகாரிகளும் காவலர்களும் மெளனம் சாதிக்கின்றனர் . அங்குள்ள புனித அலோய்சியுஸ் கல்லூரி முதல்வர் அருள் தந்தை டேவிஸ் ஜார்ஜ் இது பற்றிக் கூறுகையில் தர்ம் இரக்ச சேனாவின் உறுப்பினர்கள் யோகேஷ் அகர்வால் என்பவர் தலைமையில் வந்து ஆலயத்தை எரிக்கப் போவதாகவும் முடிந்தால் தடுத்துப்பார்க்கட்டும் என்று அன்று காலை சூளுரைத்துச் சென்றுள்ளனர் . ஆலயம் எரிக்கப்பட்ட இரவு மூவர் இரு சக்கர மோட்டார் வாகனத்தில் ஆலயத்துக்கு வந்து தீ வைத்துச் சென்றதாக நேரில் பார்த்தவர்கள் பின்னர் கூறியிருக்கிறார்கள் . அவர்கள் திருப்பீடம் , விவிலியம் , சிலுவை , புனித பேதுரு பவுல் சுரூபங்கள் ஆகியவற்றை எரித்துள்ளனர் . எரித்தவர்கள் யார் என்று காவலர்களுக்குத் தெரிந்தும்

குற்றவாளிகளைப் பாதுகாக்க முயல்வதாக மத்தியப் பிரதேசத்தின் இசை மகாசங்கத்தின் இணைச் செயலர் திரு. மார்க்கோ அந்தோனி கூறியுள்ளார் . இதே போல இரட்லம் மாவட்டத்திலும் இந்தூர் மாவட்டத்திலும் கடந்த இரண்டு வாரங்களாக ஆலயங்கள் தீ வைக்கப்பட்டன . காவலர்கள் கிறிஸ்தவர்களைக் குற்றவாளிகளாகக் கூறியுள்ளனர்








All the contents on this site are copyrighted ©.