2008-09-19 11:21:34

செப்டம்பர் 19 – புனித ஜனுவாரியுஸ்


அக்காலத்தில் உரோமைப் பேரரசன் தியோக்கிளிசியன் நடத்திய வேதகலகத்தில் எண்ணற்ற குருக்களும் கிறிஸ்தவர்களும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையறிந்த பெனெவெந்து ஆயராக இருந்த புனித ஜனுவாரியுஸ் ஆறுதல் சொல்லுவதற்காகச் சிறைக்குச் சென்றார். அதனால் பேரரசன் ஜனுவாரியுஸை வேதத்தை மறுதலிக்குமாறு வற்புறுத்தினான். அவர் அதற்கு உடன்படவில்லை. எனவே அவரை நெருப்பில் போட்டுச் சுட்டெரிக்ககக் கட்டளையிட்டான். ஆனால் நெருப்பு அவரைத் தொடவில்லை. பின்னர் கொடிய விலங்குகளுக்கு இரையாகப் போடுமாறு ஆணையிட்டான். அவைகள் அவருக்குத் தீங்கு இழைக்காமல் அவரது திருவடிகளை நக்கிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த பலர் மனந்திரும்பினர். இறுதியில் அவரது தலையை வெட்டிக் கொல்லக் கட்டளையிட்டான். புனித ஜனுவாரியுஸின் தலையும், இரத்தம் அடங்கிய இரு பளிங்குக் குப்பிகளும் நேப்பிள்ஸ் நகர்ப் பேராலயத்தில் வைக்கப்பட்டுள்ளன. ஏராளமான புதுமைகளும் நடந்து வருகின்றன. இறுக உறைந்திருக்கும் இவருடைய இரத்தம் அடங்கிய குப்பிகளை இவரது தலையின் அருகே கொண்டு போகும் போது இரத்தம் இளகி சிவப்பு நிறமாகிக் கொதிப்பது போல் காணப்படும். இப்புதுமை நிகழ்ச்சி கி.பி. 14ம் நூற்றாண்டு முதல் இன்றுவரை இவரது திருவிழா அன்று 18 தடவைகள் நடந்து வருகிறது. இந்நிகழ்வு இயற்கைக்கு அப்பாற்பட்டது என்று மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. புனித ஜனுவாரியுஸ் தலைவெட்டப்பட்ட போது தரையில் விழுந்த குருதியை யுசேபியா என்ற பெண் குப்பியில் சேர்த்ததாகச் சொல்லப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.