2008-09-16 20:38:40

இலங்கையில் ஆயர்கள் அவசர உதவிக்கு வேண்டுகோள் .16 செப்.08


இலங்கையில் போர் அதிகரிக்கிறது . மக்கள் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் எனச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன .உணவும் மருந்தும், இருப்பதற்கு இடமும் இல்லாதிருக்கும் நிலையில் ஐக்கிய நாட்டு உதவி நிறுவனத்துக்கு எந்தப் பாதுகாப்பும் கொடுக்க இயலாது என இலங்கை அரசு கூறிவிட்டதால் ஐ.நா. சமூக சேவையாளர்களை ஐ.நா. சபை விலக்கிக் கொண்டிருக்கிறது . கிளிநொச்சிப் பகுதியில் நிலைமை மிகவும் மோசமாகிக் கொண்டிருப்பதாக ஆசியச் செய்தி ஊடகம் கூறியுள்ளது . வன்னி மற்றும் கிளிநொச்சி மறைமாவட்ட ஆயர் மேதகு ஜோசப் ராயப்பு மற்றும் ஜாப்னா ஆயர் தாமஸ் சவுந்தர நாயகம் ஆகியோர் ஆயிரக்கானோர் உணவும் உதவியும் இன்றி புலம் பெயர்ந்தும் தவிக்கும் இந்த வேளையில் அவசர உதவிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் . விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக இலங்கை அரசு கடுமையாகச் சண்டையிட்டு வருவதாகத் தெரிகிறது .








All the contents on this site are copyrighted ©.