2008-09-15 19:30:22

புனித பெர்னதெத்தின் பள்ளிக்கூடம் .15,செப்டம்பர் 08.


லூர்து நகரில் புனித வியாகுல அன்னையின் பெருவிழா திங்களன்று கொண்டாடப்பட்டது .

அன்று காலை 8.45 மணிக்கு திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் புனித பெர்னதெத் கி.பி.1858ல் டிசம்பர் 2 ஆம் தேதி முதல்முறையாக தேவ நற்கருணை அருந்திய சிற்றாலயத்துக்குச் சென்றார். இப்பொழுது அதோடு இணைந்து ஒரு மருத்துவ மனை உள்ளது .அங்கிருந்த கன்னியர் இல்லத்தோடு பள்ளிக்கூடமும் இருந்தது. லூர்தன்னையின் காட்சிகளைக் கண்ட பிறகு பெர்னதெத் அந்தப் பள்ளியில் பயின்றாள் . லூர்து நகருக்கு வரும் திருப்பயணிகள் அந்தப் புனித இடத்துக்குச் செல்வார்கள் . அது அமைதியான இடம் . அங்கு சிறிது நேரம் செபித்த பிறகு திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் அங்கிருந்து ஜூபிலிக் கொண்டாட்டத்தின் நான்காவது முக்கிய திருப்பயணத் திட்டமாகிய ஜெபமாலை அன்னை பசிலிக்காவுக்குச் சென்றார் .








All the contents on this site are copyrighted ©.