2008-09-14 18:39:05

 லூர்துநகர் புனித பெர்னதெத்துப் பேராலயம். 14செப்.-


திருத்தந்தையின் பிரான்ஸின் நான்கு நாள் திருப்பயணத்தின் மூன்றாவது நாள் ஞாயிறு மாலை 5.15 மணிக்கு பிரான்ஸ் நாட்டின் ஆயர்களைப் புனித பெர்னதெத்தின் ஆலயத்தில் சந்தித்து உரை நிகழ்த்தினார் திருத்தந்தை . இந்த ஆலயம் 1988 ஆம் ஆண்டில் அர்சிக்கப்பட்ட மிக முக்கியமான வழிபாட்டுத்தலம். அது லூர்தன்னை வழக்கமாகப் பெர்னதெத்துக்குக் காட்சி கொடுத்த கெபிக்கு எதிர்ப்புறத்தில் கேவ் ஆற்றுக்கு மறு கரையில் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்துதான் புனித பெர்னதெத் இறுதி முறையாக , பதினெட்டாவது முறையாக லூர்தன்னையின் காட்சியைக் கண்டாள். புனித பெர்னதெத்தின் ஆலயம் ஒரு நவீனக் கட்டிடம் . பழங்கால ஆலயங்களைப்போல கலை வேலைப்பாடு அதிகம் இல்லாதது . ஆனால் அதன் நடுக்கூடத்தில் எவ்வளவுக்கு இயற்கை ஒளியைப்பெற முடியுமோ அவ்வளவுக்கு ஒளியைப் பெறுவதற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது . அதிக ஒளியை உள்வாங்குமாறு வண்ணங்கள் கட்டிடத்தின் உட்புறத்தில் கலை உணர்வோடு பயனுள்ள முறையில் பூசப்பட்டுள்ளன . அது ஜான் பால் பெலிக்ஸ் என்பவரால் வடிவமைக்கப்பட்டது . நடுக்கூடத்தில் 5000 பேர் அமர்வதற்கு இருக்கைகள் உள்ளன. மேலும் 350 இருக்கைகளுக்கு அங்கு இடமுள்ளது . இந்த ஆலயத்தின் ஒரு பகுதியில் அரைமதி வடிவில் அரங்கம் ஒன்று உள்ளது . அது வழிபாட்டுக்கும் கலந்துரையாடலுக்கும் பயன்படும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . அங்குத்தான் பிரான்ஸ் நாட்டு ஆயர்குழுவின் இலையுதிர் கால மற்றும் வசந்தகாலப் பொது அமர்வு நடைபெறும் .இங்கு திருத்தந்தை பிரான்ஸ் நாட்டு ஆயர்களுக்கு உரை வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.