2008-09-13 14:16:45

ஜிம்பாபுவே புதிய அரசு உணவு நெருக்கடியை அகற்றுவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு காப்போடு அமைப்பு அழைப்பு


செப்.13, 2008. ஜிம்பாபுவேயில் புதிய சகாப்தம் வருவதற்கான வாய்ப்புகள் தெரிவதை வரவேற்றுள்ள அதேவேளை, அந்நாட்டில் நிலவும் மிகப்பெரும் உணவு நெருக்கடியை அகற்றுவதற்கு அதிகாரத்தைப் பகிரும் புதிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென காப்போடு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

பிரிட்டன் ஆயர் பேரவையின் உதவி நிறுவனமான காப்போடு அமைப்பு, ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக ஜிம்பாபுவேயில் பிறரன்புப் பணியாற்றி வருகிறது. தற்சமயம் அந்நாட்டின் மிகவும் நலிந்த ஏறத்தாழ ஒரு இலட்சத்து பத்தாயிரம் பேருக்கு உணவளித்து வருகிறது.

ஜிம்பாபுவேயில் அதிகாரத்தைப் பகிரும் ராபர்ட் முகாபேயும் மோர்கன் த்ஸ்வான்ஜிரும் அந்நாட்டில் உணவு நெருக்கடியை எதிர் நோக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்வதற்கு உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென காப்போடு அமைப்பு ௬றியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளில் ஜிம்பாபுவேவை விட்டு ஏறத்தாழ முப்பது இலட்சம் மக்கள் வெளியேறி இருப்பதால் தற்பொழுது அந்நாட்டின் மக்கள் தொகை ஒரு கோடியே இருபது இலட்சத்துக்குக் குறைவாக இருப்பதாக காப்போடு ௬றியது.








All the contents on this site are copyrighted ©.