2008-09-09 15:15:32

ஒரிசாவில் துன்புறும் கிறிஸ்துவர்களுக்காக இந்துக்கள் மற்றும் முஸ்லும்களுடன் சேர்ந்து கிறிஸ்துவர்கள் செபம், நோன்பு


செப்.9, 2008 இந்தியாவில் கிறிஸ்துவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக நடைபெற்ற ஒருநாள் செபம் மற்றும் உண்ணா நோன்பு, புதிய சகாப்தத்திற்கான அடையாளம் என்று இந்திய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் வர்க்கி விதாயாத்தில் ௬றினார்.

இந்தியாவில் கிறிஸ்துவர்களுக்கு எதிராக இடம் பெறும் வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கடந்த ஞாயிறன்று இந்திய திருச்சபை கடைப்பிடித்த செபம் மற்றும் உண்ணா நோன்பு பற்றிக் குறிப்பிட்ட கர்தினால் விதாயாத்தில், இந்நாளின் புதினம் என்னவென்றால் கிறிஸ்துவர்கள் வன்முறைக்கு எதிராக வன்முறை என்று பதில் சொல்வதை விடுத்து, தீமைகளைச் செய்தவர்களைக் கடவுளின் நீதித் தீர்ப்புக்கு விட்டு விட்டு, தீமைகளை வெற்றி கொள்வதற்குக் செபம் மற்றும் உண்ணா நோன்பை அனுசரித்தனர் என்றார்.

இந்திய திருச்சபை, உங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள், உங்களைத் துன்புறுத்துவோருக்காகச் செபியுங்கள் என்ற இயேசுவின் போதனையை அந்நாளில் வாழ்ந்து காட்டி இந்தியாவுக்கும் ஆசியாவுக்கும் உலகுக்கும் விசுவாசிகளுக்கும் விசுவாசமற்றவர்களுக்கும் மிகவும் சகிதி வாய்ந்த மறைக் கல்வியைப் போதித்துள்ளது என்றும் அவர் ௬றினார்.

கடந்த ஞாயிறன்று இந்தியா முழுவதும் கத்தோலிக்கர்கள் ஆலயங்களிலும் திறந்த வெளிகளிலும் ௬டி ஒரிசாவில் துன்புறும் கிறிஸ்துவர்களுடன் தங்களது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்தனர். இதில் இந்துக்கள், முஸ்லீம்கள், சீக்கியர்கள், எனப் பிற மதங்களைச் சேர்ந்தோரும் கலந்து கொண்டனர்.

 








All the contents on this site are copyrighted ©.