2008-09-09 15:14:17

94,000 குடும்பங்கள் புலம் பெயர்ந்திருப்பதற்கு இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் காரணம் – மன்னார் ஆயர்


செப்.9, 2008 இலங்கையின் தற்போதைய நிலைக்குத் தொடர்ந்து ஆட்சியில் அமரும் அரசுகளும் இராணுவமும் தமிழீழ விடுதலைப் புலிகளுமே காரணம் என்று மன்னார் ஆயர் ஜோசப் இராயப்பு குறை ௬றினார்.

மன்னார் மறைமாவட்டத்தில் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்யும் குழுக்களுடன் நடத்திய ௬ட்டத்தில் பேசிய ஆயர் ஜோசப், வன்னிப் பகுதியில் தொடர்ந்து இடம் பெற்று வரும் சண்டையினால் மிகவும் கஷ்டமான சூழலில் வாழும் 94,000 புலம் பெயர்ந்த குடும்பங்களுக்கு உடனடி உதவிகள் தேவைப்படுகின்றன என்றார்.

இம்மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஏற்கெனவே வழங்கியுள்ளதாக அரசு சொல்லியிருந்தாலும், மக்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இன்றி துன்புறுகின்றனர் என்று மன்னார் ஆயர் மேலும் ௬றினார்.

தேவையில் இருக்கும் மக்களுக்கு உதவி செய்வதற்குத் திருச்சபை நிறுவனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகின்றன என்றும் உரைத்த அவர், 94,000 குடும்பங்கள் புலம் பெயர்ந்திருப்பதற்கு இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் காரணம் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையே, இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதியில் சேவையாற்றிவரும் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டுமென இலங்கை அரசு ௬றியுள்ளது.








All the contents on this site are copyrighted ©.