2008-09-06 13:09:26

சர்தீனியா தீவுக்கு திருத்தந்தையின் திருப்பயணம்


செப்.06, 2008 இத்தாலியின் தென்மேற்கில் அமைந்துள்ள சர்தீனியா தீவுக்கு இஞ்ஞாயிற்றுக் கிழமை ஒரு நாள் திருப்பயணம் மேற்கொள்கிறார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்.



காஸ்தெல் கண்டோல்போவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்திலிருந்து ஹெலிகாப்டரில் சர்தீனியா தீவின் காலியாரிக்கு ஞாயிறு காலை 9.30 மணியளவில் செல்லும் திருத்தந்தை, போனாரியா அன்னைமரி திருத்தலத்தில் திருப்பலி நிகழ்த்துவார். பின்னர் காலியாரி மாகாண குருத்துவ கல்லூரி சிற்றாலயத்தைத் தரிசிப்பார்.



பிற்பகலில் காலியாரி பேராலயத்தில் குருக்கள், குருத்துவ மாணவர்கள், இன்னும் சர்தீனியா பாப்பிறை இறையியல் துறையினரையும் சந்தித்து உரையாற்றுவார். மாலையில் இளையோரைச் சந்தித்து உரையாற்றுவார். இத்துடன் சர்தீனியா தீவுக்கான திருத்தந்தையின் ஒரு நாள் திருப்பயணம் நிறைவு பெறும்.








All the contents on this site are copyrighted ©.