2008-09-06 13:10:37

இந்திய பெண் குழந்தைகள் தினம்


செப்.06, 2008. இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை அதிகரித்து வருவது, பெண் குழந்தைகளின் விகிதாச்சாரம் குறைந்து வருவது, இவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் பெண் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகின்றது என்று இந்திய தலத்திருச்சபை ௬றியது.



அன்னைமரியா பிறந்த தினமான செப்டம்பர் 8ம் தேதியன்று இந்திய திருச்சபை பெண் குழந்தைகள் தினத்தைச் சிறப்பிக்கின்றது.



2001ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில் 1000 சிறுவர்களுக்கு 927 சிறுமிகள் இருந்தனர். தாயின் கர்ப்பத்தில் பாலினம் பார்க்கப்படுவதையொட்டி கடந்த இருபது ஆண்டுகளில் 5 இலட்சம் பெண் குழந்தைகள் காணாமற் போயுள்ளனர்.



பெண் சிசுக் கொலை, பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் கடுமையான வன்முறைகளில் ஒன்று என்றும் இந்திய ஆயர் பேரவை ௬றியது.








All the contents on this site are copyrighted ©.