2008-09-04 18:44:04

நாடோடி இன மக்களுக்குத் திருச்சபையின் சேவை .

04 .செப்டம்பர் 08 .


6 ஆவது அகில உலக நாடோடி மக்களின் கருத்தரங்கு ஜெர்மன் நாட்டின் பிரெய்சிங் நகரில் நடக்கிறது . செப்டம்பர் முதல் தேதி கருத்தரங்கில் தொடக்க உரையாற்றிய வத்திக்கான் திருப்பீட புலம் பெயர்ந்தோர் பேராயத்தின் தலைவர் கர்தினால் ரெனாட்டோ மார்ட்டீனோ நாடோடி மக்கள் கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் பின் தங்கி இருப்பதால் மிகவும் மோசமான வாழ்க்கைத் தரத்தில் இருப்பதாகக் கூறினார் .இதன் விளைவாக இளைஞர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளதாகக் கூறினார். அரசுக்களும் அகில உலக நிறுவனங்களும் நாடோடி மக்களின் மாண்பைக்காக்க ஆவன செய்யவேணடும் எனவும் கடமையுணர்வோடும் பாசத்தோடும் இவர்களுக்கு அன்பைக்காட்ட வேண்டும் எனவும் கர்தினால் ரெனாட்டோ மார்ட்டீனோ அவரது உரையின் முடிவில் கூறினார் .








All the contents on this site are copyrighted ©.