2008-09-03 15:01:38

திருச்சபை அநீதிக்கு எதிராய்ப் போராட வேண்டும் – கர்தினால்


செப். 03 எந்த ஒரு மனிதனுக்கும் எதிராக, அதிலும் குறிப்பாக ஓரங்கட்டப்பட்டோருக்கு எதிராக இடம் பெறும் அநீதிகள் மற்றும் பாகுபாடுகளின் மத்தியில் திருச்சபை பாராமுகமாய் இருக்க முடியாது என்று திருப்பீட நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் ௬றினார்.

ஜெர்மனியின் ப்ரெய்சிங்கில் இடம் பெறும் ஜிப்சிகளுக்கான மேய்ப்புப்பணி நலன் குறித்த ஆறாவது சர்வதேச மாநாட்டில் உரையாற்றிய கர்தினால் ரெனாத்தோ மர்த்தினோ, அம் மாநாட்டில் கலந்து கொள்ளும் இளையோர்க்கென சிறப்பு செய்திகளை வழங்கினார்.

இளையோர், திருச்சபைக்கும் சமூகத்திற்கும் வளமையானவர்கள் என்று கருத்ப்படும் வேளை, இம்மாநாடும் இளையோர்க்கென சிறப்பான இடத்தை ஒதுக்கியுள்ளது என்ற கர்தினால், திருச்சபைக்கு அவர்களின் இளமைத் துடிப்பான விசுவாசமும், தாராளமும், நேர்மையான கருத்துக்களும் தேவைப்படுகின்றன என்றார்.

இளையோர், தங்களிலும் குடும்பத்திலும், அரசியலிலும் நீதித்துறையிலும் கல்வி நிறுவனங்களிலும், ஏன் திருச்சபையிலும் சமூகத்திலும் ௬ட நம்பிக்கை இழப்புகளை அனுபவிக்கின்றனர் என்றும் அவர் ௬றினார்.

னிதர்களின் மாண்பையும் உரிமைகளையும் மதிக்க வேண்டியது தங்களது பொறுப்பு என்பதை எல்லாக் கிறிஸ்தவர்களும் உணர வேண்டும் என்றும் கர்தினால் மர்த்தினோ வலியுறுத்தினார்.

திருப்பீட குடியேற்றதாரர் அவை மற்றும் ஜெர்மன் ஆயர் பேரவையால் நடத்தப்படும் இச்சர்வதேச மாநாடு இவ்வியாழக் கிழமை நிறைவு பெறும். இதில் சுமார் 150 பேர் கலந்து கொள்கின்றனர்.








All the contents on this site are copyrighted ©.