2008-09-01 14:45:32

குடியேற்றதாரர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட திருத்தந்தை வேண்டுகோள்


செப்டம்பர் 01 ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர் குடியேற்றதாரர்களின் நலன் குறித்த தனது கரிசனையை வெளிப்படுத்தினார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்.

இக்காலத்தில் குடியேற்றம் அவசரகால நிலையாக மாறியுள்ளது என்றுரைத்த திருத்தந்தை, இப்பிரச்சனைக்கான தீர்வில் தோழமையுணர்வும் பலன்தரவல்ல அரசியல் ரீதியான தீர்வுகளும் அவசியமாகின்றன என்றார்.

ஆகஸ்ட் 21ம் தேதி, 78 ஆப்ரிக்க குடியேறிகள் லிபியா நாட்டிலிருந்து சிறிய படகில் புறப்பட்ட போது படகு புயலில் சிக்கி கவிழ்ந்தது. மால்ட்டா மீனவர்கள் அவர்களில் 8 பேரைக் காப்பாற்றி இருக்கினறனர்.

RealAudioMP3 இந்த விபத்தில் இறந்தவர்கள் இதற்கு முனனர் இறந்த குடியேறிகளைவிட அதிகம் என்றரைத்த திருத்தந்தை, சட்டத்துக்குப் புறம்பேயான குடியேற்றங்கள் இடம் பெறாமலிருக்க அவர்களைச் சேர்ந்த நாடுகளும் அவர்களை வரவேற்கும் நாடுகளும் தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்,








All the contents on this site are copyrighted ©.