2008-09-01 14:43:36

ஒருவர் தனது சிலுவையை தூக்கிக் கொண்டு கிறிஸ்துவைப் பின்செல்வது அவரது சொந்த விருப்பத்தினால் செய்யப்டுவது அல்ல, மாறாக அது ஒரு மறைப்பணி - திருத்தந்தை


செப்டம்பர் 01 ஒருவர் தனது சிலுவையை தூக்கிக் கொண்டு கிறிஸ்துவைப் பின்செல்வது அவரது சொந்த விருப்பத்தினால் செய்யப்படுவது அல்ல, மாறாக அது ஒரு மறைப்பணி, கிறிஸ்தவர்கள் அவ்வாறு வாழவே அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் ௬றினார்.

RealAudioMP3 உரோமைக்குத் தெற்கே இருக்கின்ற காஸ்தெல் கண்டோல்போவிலுள்ள பாப்பிறைகளின் கோடை விடுமுறை இல்லத்தின் முன்வளாகத்தில் ௬டியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, ஞாயிறு நற்செய்தி வாசகமான தூய பேதுருவின் விசுவாசத்தை மையமாக வைத்துப் பேசினார்.

தான் எவ்வாறு துன்பப்பட்டு கொல்லப்பட்டு பின்னர் உயிர்த்தெழ வேண்டும் என்பதை கிறிஸ்து ௬றிய போது பேதுரு அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அவரிடம் இப்படி உமக்கு நடக்கவே ௬டாது என்றார். இங்கு போதகரும் சீடரும் இரண்டு மாறுபட்ட வழிகளில் சிந்திக்கின்றனர் என்பதை இது காட்டுகின்றது என்றார் திருத்தந்தை.

கடவுள் தமது மகன் சிலுவையில் இறந்து தமது பணியை நிறைவு செய்வதை அவர் ஒரு பொழுதும் அனுமதிக்கக் ௬டாது என்று மனித முறையில் பேதுரு சிந்திக்கிறார், ஆனால் தனக்கு இவ்வாறு நடப்பது சரியானதே என்பது இயேசுவின் சிந்தனை என்றும் ௬றினார் திருத்தந்தை.

உண்மையில் இயேசு தமது மரணம் மற்றும் உயிர்ப்பினால் பாவத்தையும் மரணத்தையும் வென்று கடவுள் தன்மையை மீண்டும் நிலைநாட்டினார், எனினும் இப்போராட்டமானது இன்னும் முடியவில்லை, தீமையானது ஒவ்வொரு தலைமுறையிலும், ஏன் நமது காலத்திலும் இருக்கின்றது, சண்டையின் கொடுமைகள், அப்பாவிகள் வன்முறைக்குப் பலியாகுவது, நலிந்தோரை வதைக்கும் துன்பங்கள் மற்றும் அநீதிகள் ஆகியவை கடவுளின் அரசுக்கு எதிரான தீமைகள் அல்லவா என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார் திருத்தந்தை.

காழ்ப்புணர்வை தோற்கடிக்கும் ஆயுதங்களற்ற அன்பினாலும் மரணத்திற்கு அஞ்சாத வாழ்வினாலும் அன்றி வேறு எதனால் ஒருவர் இவற்றிக்குப் பதில் சொல்ல முடியும் என்ற கேள்வியையும் எழுப்பிய திருத்தந்தை, இயேசு தாம் புரிந்து கொள்ளப்படாத போதும் தமது சீடர்கள் பலரால் கைவிடப்பட்ட போதும் இப்புதிரான சக்தியையே கையாண்டார் என்றார்.

நமது மீட்பர் தமது மீட்புப் பணியை நிறைவு செய்வதற்குத் தனது சிலுவையை தூக்கிக் கொண்டு அவரைப் பின்செல்லத் தயாராய் இருக்கும் ஆண்கள் பெண்கள் அனைவரையும் தொடர்ந்து அழைத்துக் கொண்டு இருக்கிறார் என்று மூவேளை செப உரையில் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் ௬றினார்.








All the contents on this site are copyrighted ©.