2008-08-29 20:29:23

இரஷ்யாவின் புதிய ஆலயத்துக்குத் திருத்தந்தை ஆசி.2908.


இரஷ்யாவைச் சேர்ந்த டாட்டர்ஸ்டான் குடியரசின் தலைநகராகிய கசன் என்ற நகரில் திருச்சிலுவையின் மகிமை ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது . முஸ்லிம்கள் அதிகம் வாழும் அங்கு இதுவரை கத்தோலி்க்க ஆலயம் எழுப்பப்படவில்லை . இங்கு வாழும் 300 கிறிஸ்தவக் குடும்பங்கள் கல்லறைத் தோட்டத்தில்தான் வழிபாடு நடத்தி வந்தார்கள். கசன் மக்கள் கொடுத்த நிதி உதவியால் இந்த ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இவ்வாலயம் ஆகஸ்ட்டு 29 ஆம் தேதி அர்சிக்கப்பட்டது. திருத்தந்தையின் ஆசியை கர்தினால் ஆஞ்சலோ சோடானோ கொண்டு சென்றார். கர்தினால் குழுவின் தலைவராகிய இவர் ஆலய அர்ச்சிப்பை முன்னின்று நடத்துகிறார் . இரஷ்யாவுக்கான வத்திக்கான் தூதர் மேதகு அந்தோனியோ மெனினியும், அந்நாட்டுத் தலைவரும், நகர மேயரும் மற்றும் பிரமுகர்களும் இப்புனித நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள் .








All the contents on this site are copyrighted ©.