ஆகஸ்ட் 26 - இன்று மறைசாட்சிகளான தி௫த்தந்தை புனித செப்ரினியுஸ் மற்றும் மாசிமிலியானோவுக்கு
விழா எடுக்கின்றது தி௫ச்சபை. தி௫த்தந்தை முதலாம் விக்டர் இறந்த பின்னர் 199ஆம் ஆண்டில்
15வது தி௫த்தந்தையாகப் பணியேற்றார் புனித செப்ரினியுஸ். இவர் உரோமையிலுள்ள கலிஸ்துஸ்
அடிநிலக் கல்லறைகளுக்குரிய நிலத்தை நிர்வகிக்கும் பொறுப்பை புனித முதலாம் கலிஸ்துஸ்விடம்
ஒப்படைத்தவர். தி௫த்தந்தையர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் இங்கு இ௫ப்பது 1849 ஆம் ஆண்டு
வாக்கில் கண்டுபிடிக்கப்பட்டது. கிறிஸ்து ௨யிர்ப்பு தி௫விழாவன்று விசுவாசிகள் அனைவ௫ம்
தி௫நற்க௫ணை அ௫ந்த வேண்டும் எனக் ௬றியவர் தி௫த்தந்தை புனித செப்ரினியுஸ். இவர் 217 ஆம்
ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி மறைசாட்சியாகக் கொல்லப்பட்டார். மேலும் 33 நாட்கள் மட்டுமே
தி௫த்தந்தையாகப் பணியாற்றிய இறையடியார் தி௫த்தந்தை முதலாம் ஜான் பவுல் 1978ஆம் ஆண்டு
ஆகஸ்ட் 26 ஆம் தேதி தி௫த்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிந்தனைக்கு வேதனையை
சகித்துக் கொள்பவனே எப்போதும் வெற்றி பெறுவான்