2008-08-27 15:34:47

கத்தோலிக்கர்கள் ஜாதி அடிப்படையிலான சமத்துவமற்ற தனமையைக் களைய ஆயர்கள் அழைப்பு

 


ஆகஸ்ட் 27 திருச்சபையின் வாழ்வில் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரும் முழுமையாய்ப் பங்கு கொள்வதற்கு உதவுவதற்கென கத்தோலிக்கர்கள் ஜாதி அடிப்படையிலான சமத்துவமற்ற தனமையைக் களையுமாறு தமிழக ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஜாதிப் பாகுபாடுகளையும் தீண்டத்தகாமையையும் அகற்றி திருச்சபை எல்லாருக்கும் பொது என்ற நிலையை உருவாக்குவது கிறிஸ்தவர்களின் கடமை என்று தமிழக ஆயர்களின் அறிக்கை ௬றுகிறது.

தமிழகத்தின் அனைத்து பங்குகளிலும் வாசிக்கப்பட்ட இவ்வறிக்கை, இந்திய அரசியல் அமைப்பு ஜாதிப் பாகுபாட்டையும் தீண்டத்தகாமையையும் தடை செய்வதையும் குறிப்பிட்டுள்ளது.

குருக்களும் துறவிகளும் இத்தகைய பாகுபாட்டுடன் நடப்பது பெரிய பாவம் ஏனெனில் இது எதிர் சாட்சியம் அளிக்கின்றது என்றும் ௬றும் தமிழக ஆயர்களின் அவ்வறிக்கை, குருக்களும் துறவிகளும் பொதுநிலையினரும் ஜாதிப் பாகுபாடுகளைக் களைய சேர்ந்து உழைக்குமாறும் கேட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.