2008-08-26 15:51:56

கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டிவிடும் இந்து தேசீயவாதம், ஒரு புற்றுநோய்


ஆகஸ்ட் 26 கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தூண்டிவிடும் இந்து தேசீயவாதம், ஒரு புற்றுநோய், இது இந்திய சமுதாயத்தின் அடித்தளமான சமூகங்கள் ஒன்றிணைந்து வாழ்வதை பாதிக்கின்றது என்று கட்டாக் புவனேஷ்வர் பேராயர் இரபேல் சென்னத் ௬றினார்.

இத்தகைய தேசீயவாதத்தின் அடிப்படைக் ௬றுகள், குறிப்பாக ஆர் எஸ் எஸ் அமைப்பு வழியாக வெளிப்படுத்தப்படும் செயல்கள் கிட்லரின் நாசிசச் செயல்கள் என்று பேராயர் சென்னத் மேலும் ௬றினார்.



இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை இரவு விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர் ஸ்வாமி லஷ்மானந்தா சரஸ்வதி மற்றும் நான்கு பேர் அத்தலைவரின் இல்லத்தில் கொல்லப்பட்டனர். இதற்கு மாவோயிஸ்ட், புரட்சியாளர்கள் காரணம் என்று காவல்துறை ௬றியுள்ளது. எனினும் இதற்கு கிறிஸ்தவர்கள் காரணம் என்று சொல்லி அம் மாநிலத்தின் பல இடங்களில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வனமுறைத் தாக்குதல்களை இந்து தீவிரவாதக் கும்பல்கள் நடத்தி வருகின்றன.

கருணை இல்லங்கள், கன்னியர் இல்லங்கள் குருக்களின் பங்கு இல்லங்கள் உள்ளிட்ட குறைந்தது 10 கிறிஸ்தவ நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன. அனாதைச் சிறாரைத் தாக்க வந்த சமயம் அதைத் தடுக்க முயன்ற பெண் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளாள்.

இந்து தீவிரவாதக் கும்பல்களின் இத்தாக்குதல்களுக்குப் பயந்து பல குருக்களும் அருட்சகோதரிகளும் கிறிஸ்தவரும் காடுகளுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலைமை பற்றி விளக்கிய கட்டாக் புவனேஷ்வர் பேராயர், கிறிஸ்தவம் ஒரிசா மாநிலத்தில் ஆழமாக வேரூனறியுள்ளது என்றும் பல பூர்வீக இனத்தவருக்கும் புறக்கணிக்கப்பட்ட இனத்தவருக்கும் தலைமுறைகளுக்கும் திருச்சபை ஒளியாய் இருக்கின்றது என்றும் ௬றினார்.

ஒரிசாவில் 94 விழுக்காட்டுக்கும் மேற்பட்டோர் இந்துக்கள். 2.4 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.








All the contents on this site are copyrighted ©.