2008-08-26 15:58:50

இலங்கையில் சண்டையினால் இடம் பெயர்ந்துள்ள 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட அகதிகளுக்கு நிவாரண உதவிகளுக்கு யாழ்ப்பாண மறைமாவட்ட விண்ணப்பம்


ஆகஸ்ட் 26 இலங்கையின் யாழ்ப்பாண பகுதியில் வன்முறைகள் அதிகரித்து வரும் வேளை சண்டையினால் இடம் பெயர்ந்துள்ள 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட அகதிகளுக்கு நிவாரண உதவிகளுக்கு யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி மற்றும் அமைதி அவை விண்ணப்பித்துள்ளது.

மடுமாதா திருத்தல விழா முடிந்து இரண்டு வாரங்கள் ஆகியுள்ள வேளை அப்பகுதி முழுவதும் வன்முறைகளும் படு கொலைகளும் நிறைந்த அரங்காக இருக்கின்றது என்றுரைக்கும் அவ்வவை, விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையேயான சண்டையில் தங்கள் வீடுகளை விட்டு கட்டாயமாக வெளியேறியுள்ள அகதிகளுக்கு நிவாரண உதவிகள் உடனடியாகத் தேவை என்று ௬றியுள்ளது.

மேலும், யாழ் ஆயர் தாமஸ், மன்னார் ஆயர் ஜோசப், அனுராதபுர ஆயர் நார்பெர்ட் ஆகியோர் நாளை கிளிநொச்சி காடுகளில் வாழும் அகதிகளைச் சந்திக்கவுள்ளனர்.

இன்னும், இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்கு சிறுபான்மை மக்களுக்கு பெரும்பான்மையினத்தால் அதிகாரங்கள் வழங்கப்படும் என்பதில் தமது நாடு நம்பிக்கை இழந்துள்ளதால் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இருந்து விலகிக்கொள்வதாக ஜெர்மனி தெரிவித்துள்ளது.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட இலங்கைக்கான ஜெர்மன் தூதுவர் ஜெர்ஜன் வீத் அங்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கை இனப்பிரச்சியை தீர்ப்பதற்கு ஜெர்மனியினால் தெரிவிக்கப்பட்டுவரும் எமது கோரிக்கைகளையும் ஆலோசனைகளையும் இலங்கை அரசு தொடர்ந்து புறக்கணித்துவருகின்றது என்றும் ஜெர்மன் தூதுவர் ௬றினார்.








All the contents on this site are copyrighted ©.