2008-08-26 15:55:48

ஆப்ரிக்காவில் கத்தோலிக்கத் திருச்சபை உயிரூட்டமுடன் வளர்ந்து வருகிறது


ஆகஸ்ட் 26 ஆப்ரிக்காவில் கத்தோலிக்கத் திருச்சபை உயிரூட்டமுடன் வளர்ந்து வருவதால் திருச்சபை அதன் மீது மிகுந்த கவனம் செலுத்துகின்றது என்று உலக ஆயர் மன்ற பொதுச் செயலர் பேராயர் நிக்கோலா எத்தெரோவிச் ௬றினார்

வருகிற அக்கோடபர் 5 முதல் 26 வரை வத்திக்கானில் நடை பெறும் 12வது ௨லக ஆயர் மன்றத்திற்குச் சிறப்பு செயலாளராக கின்ஷாசா பேராயர் லவ்ரே மொன்சென்குவோ பசின்யாவை திருத்தந்தை நியமித்துள்ளது குறித்து வத்திக்கான் வானொலிக்குப் பேட்டியளித்த பேராயர் எத்தெரோவிச் இவ்வாறு ௬றினார்

கத்தோலிக்கத் திருச்சபைக்கு ஆப்ரிக்கா முக்கியமான கண்டம் என்றுரைத்த பேராயர் எத்தெரோவிச், அக்கண்டத்தில் திருச்சபையின் வளர்ச்சி எண்ணிக்கையில் மட்டுமல்லாமல் தரத்திலும் வளர்ந்து வருகிறது என்றார்.

திருச்சபையின் வாழ்விலும் மறைப்பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் 12வது ௨லக ஆயர் மன்றம் நடை பெறவுள்ளது







All the contents on this site are copyrighted ©.