2008-08-23 17:59:58

கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணை பாதுகாப்பு கேடயம் அமைப்பதற்கான திட்டம், உலக அளவில் ஆயுதக் களைவைப் பாதிக்கும்


ஆகஸ்ட் 23 கிழக்கு ஐரோப்பாவில் ஏவுகணை பாதுகாப்பு கேடயம் அமைப்பதற்கான அமெரிக்க ஐக்கிய நாட்டுத் திட்டம் அந்நாட்டிற்கும் இரஷ்யாவுக்கும் இடையேயான உறவுகளைக் கடுமையாய்ப் பாதிக்கும் என்று திருப்பீட சார்பு தினத்தாள் லொசர்வாத்தோரே ரொமானோ எச்சரித்தது.
அச்சுறுத்தலில் ஆயுதக் களைவு என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ள அத் தினத்தாள் அமெரிக்க ஐக்கிய நாட்டின் இத்திட்டம், உலக அளவில் ஆயுதக் களைவைப் பாதிக்கும் என்று ௬றியது.
போலந்து நிலப் பகுதியில் 10 ஏவுகணை பாதுகாப்பு கேடயம் அமைப்பது குறித்த திட்டம் அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கும் போலந்துக்கும் இடையே கடந்த வியாழனன்று கையெழுத்தானது.
இதையொட்டி பேசிய ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அமைப்புகளுக்கான வத்திக்கான் பிரதிநிதி பேராயர் சில்வானோ தொமாசி, ஒருபுறம் போலந்தில் ஏவுகணை பாதுகாப்பு கேடயம் அமைக்கப்படுவதும் மறுபுறம் இரஷ்யா ஐரோப்பிய சமுதாய அவை நாடுகளுக்கு அருகில் ஏவுகணைகளை வைக்க விரும்புவதும் பதட்ட நிலைகளை அதிகரிக்கும் என்றார்.
அடுத்த ஆண்டில் பெர்லின் சுவர் வீழ்ந்ததன் 20 ஆம் ஆண்டு நினைவு ௬ரப்படுகின்றது, இது மனித குலத்திற்குப் பாடமாக அமையும் என்றும் பேராயர் தொமாசி ௬றினார்.
1997க்கும் 2007க்கும் இடைப்பட்ட காலத்தில் உலகில் இராணுவத்திற்கான செலவு 45 விழுக்காடு அதிகித்துள்ளது. உலகில் 2007 ஆம் ஆண்டில் 1300 கோடி டாலர் ஆயுதங்களுக்கும் பிற இராணுவ செலவினங்களுக்குமெனச் செலவிடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க ஐக்கிய நாடு 54 700 கோடி டாலரைச் செலவழித்து முதலிடம் வகிக்கிறது.







All the contents on this site are copyrighted ©.