2008-08-23 17:59:17

இலங்கையில் இடம் பெறும் சண்டை காரணமாக மன்னார் மறைமாவட்டத்தில் எட்டு பங்குத் தளங்களிலிருந்து மக்கள் முழுவதுமாக வெளியேறியுள்ளனர்


ஆக.23 இலங்கையில் இடம் பெறும் சண்டை காரணமாக மன்னார் மறைமாவட்டத்தில் எட்டு பங்குத் தளங்களிலிருந்து மக்கள் முழுவதுமாக வெளியேறியுள்ளதாகவும் இதனால் அவ்விடங்களில் பணயாற்றிய குருக்கள் பிற பங்குத் தளங்களுக்குச் சென்றுள்ளதாகவும் அம்மறைமாவட்ட ஆயர் ஜோசப் இராயப்புவின் செயலர் அருட்திரு சுரேஷ் ௬றினார்.
இலங்கை விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே தொடர்ந்து இடம் பெற்று வரும் மோதல் காரணமாக இப்பங்குகளின் மக்கள் அகதிகளாக ஓரிடம் விட்டு ஓரிடமாகச் சென்று தற்சமயம் கிளிநொச்சி காடுகளுக்குள் வாழ்ந்து வருவதாகவும் அவர்களோடு குருக்களுக்கு எவ்வித தொடர்பும் இல்லையெனவும் அக்குரு மேலும் ௬றினார்.
இதேபோல் யாழ்ப்பாண மறைமாவட்டத்தில் ஆறு பங்குத் தளங்களிலிருந்து மக்கள் முழுவதுமாக வெளியேறியுள்ளதாக ஆயர் தாமஸ் சௌந்தரநாயகம் ௬றினார். கடற்கரை பகுதியில் வாழ்ந்த இவர்கள் கிளிநொச்சி காடுகளுக்குள் வாழ்ந்து வருவதாகவும் இவர்களோடும் எவ்வித தொடர்பும் இல்லையெனவும் ஆயர் மேலும் ௬றினார்.இம்மக்கள் பற்றி மிகுந்த கவலை கொண்டுள்ள யாழ் ஆயர் தாமஸ், மன்னார் ஆயர் ஜோசப், அனுராதபுர ஆயர் நார்பெர்ட் ஆகியோர் இம்மாதம் 27ஆம் தேதி இம்மக்களைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது







All the contents on this site are copyrighted ©.