2008-08-23 17:47:37

12வது ௨லக ஆயர் மன்றத்திற்குச் சிறப்பு செயலாளராக கின்ஷாசா பேராயர் நியமனம்


ஆகஸ்ட் 23 வருகிற அக்கோடபர் 5 முதல் 26 வரை வத்திக்கானில் நடை பெறும் 12வது ௨லக ஆயர் மன்றத்திற்குச் சிறப்பு செயலாளராக கின்ஷாசா பேராயர் லவ்ரே மொன்சென்குவோ பசின்யாவை இன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட்.
திருச்சபையின் வாழ்விலும் மறைப்பணியிலும் இறைவார்த்தை என்ற தலைப்பில் நடை பெறும் 12வது ௨லக ஆயர் மன்றத்திற்குச் சிறப்பு செயலாளராக ஏற்கனவே நியமிக்கப்ட்டிருந்த இத்தாலிய ஆயர் வில்கெல்ம் எமில் எக்கர் திடீரென இறந்ததை முன்னிட்டு ஆப்ரிக்க நாடான காங்கோ குடியரசுத் தலைநகர் கின்ஷாசா பேராயர் பசின்யாவை நியமித்துள்ளார் திருத்தந்தை.
திருவிவிலியத்தை மையமாகக் கொண்டு 12வது ௨லக ஆயர் மன்றம் நடை பெறவுள்ளது. ௨லகில் அதிகமான மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல் திருவிவிலியமாகும். இது 2454 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ௨லகில் ஏறத்தாழ 6700 மொழிகள் ௨ள்ளன. இவற்றில் 3000 முக்கிய மொழிகளாகக் கருதப்படுகின்றன.
இன்னும் பிரான்சின் லூர்து நகரில் வருகிற செப்டம்பர் 4 முதல் 8 வரை நடை பெறும் 22வது சர்வதேச மரியியல் மாநாட்டிற்குத் திருத்தந்தை தமது பிரகிநிதியாக கர்தினால் பால் பாப்புவார்டை நியமித்துள்ளார்.
இவர் திருப்பீட கலாச்சார அவையின் முன்னாள் தலைவராவார்.







All the contents on this site are copyrighted ©.