2018-07-02 16:25:00

நிகராகுவா அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஆயர்களின் ஈடுபாடு


ஜூலை,02,2018. தென் அமெரிக்க நாடான நிகராகுவாவில்  அண்மையில் உருவாகியுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணும் நோக்கத்தில், தேசிய அளவிலான துவக்க கால பேச்சுவார்த்தைகள் இச்செவ்வாய்க்கிழமையன்று துவங்கும் என அந்நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

மனித உரிமைகள் குறித்த அமெரிக்க நாடுகளுக்கிடையேயான அவையின் பிரதிநிதிகளும் பங்குபெறும் இப்பேச்சுவார்த்தைகளில் இடம்பெறுவது குறித்து அரசுத் தலைவர் டேனியேல் ஒர்த்தேகா அவர்கள், இதுவரை, பதிலேதும் தரவில்லை எனவும், ஆயர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூக அரசியல் நெருக்கடி குறித்த பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள நிகராகுவா அரசுத் தலைவர் ஒர்த்தேகாவுக்கு அனுப்பிய கடிதத்திற்கு, இதுவரை பதிலில்லை என்று கூறிய ஆயர் Abelardo Mata அவர்கள், ஜூன் 7ம் தேதியே இது குறித்த விவரங்கள் அனுப்பப்பட்டுவிட்டன என்றார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நிகராகுவா தேர்தல் இடம்பெறவேண்டும், தேர்தலைக் கண்காணிக்க நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்பது குறித்து தேசிய பேச்சுவார்த்தைகள், நிகராகுவா ஆயர்களின் துணையுடன் இச்செவ்வாய்க்கிழமையன்று துவங்குகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.