2018-06-22 15:54:00

எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்திற்கு அப்போஸ்தலிக்க..


ஜூன்,22,2018. கேரளாவின் எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் தலைமை உயர்மறைமாவட்டத்தின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக, பாலக்காடு சீரோ-மலபார் வழிபாட்டுமுறை மறைமாவட்ட ஆயர் Jacob Manathodath அவர்களை, இவ்வெள்ளிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆயர் Jacob Manathodath அவர்கள், எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் உயர்மறைமாவட்டத்திற்கு “Sede Plena” என்ற முறையில், அப்போஸ்தலிக்க நிர்வாகியாக, திருத்தந்தையால்  நியமிக்கப்பட்டுள்ளார். ஆயர் Manathodath அவர்கள், எர்ணாகுளம்-அங்கமாலி உயர்மறைமாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பை முழுவதுமாக ஏற்று செயல்படுவார்.

ஒரு மறைமாவட்டத்தில் ஆயர் பணியிலிருக்கும்போதே, மற்றொருவர் அதன் நிர்வாகியாக, சில குறிப்பிட்ட காரணங்களுக்காக, திருத்தந்தையால்  நியமிக்கப்படுவது, “Sede Plena” என அழைக்கப்படுகின்றது.

கர்தினால் ஜார்ஜ் அலெஞ்சேரி அவர்கள், எர்ணாகுளம்-அங்கமாலி சீரோ-மலபார் வழிபாட்டுமுறையின் தலைமை உயர்மறைமாவட்டத்தின் தற்போதைய தலைவராக இருக்கின்றார்.

இந்தியாவின் 180 மறைமாவட்டங்களில் 132 இலத்தீன் வழிபாட்டுமுறை  மறைமாவட்டங்களும்,  34 சீரோ-மலபார் வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களும், 14 சீரோ-மலன்கார வழிபாட்டுமுறை மறைமாவட்டங்களும் உள்ளன.

தாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.