2018-06-11 16:34:00

இந்தியாவில் பேறுகால இறப்பு விகிதம் குறைவு


ஜூன்,11,2018. இந்தியாவில் பேறுகாலத்தில் இடம்பெறும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைப்பதில் இந்தியா வெற்றிகண்டுள்ளது என்று, WHO எனும் உலக நலவாழ்வு நிறுவனம் பாராட்டியுள்ளது.

1990ம் ஆண்டில், ஒரு இலட்சம் பிறப்புகளுக்கு 556 இறப்புகள் என்று இருந்த நிலை, 2016ம் ஆண்டில், அது 130ஆகக் குறைந்துள்ளது என, இஞ்ஞாயிறன்று கூறியுள்ள WHO நிறுவனம், பெண்களின் கல்வி மற்றும் மகப்பேறு காலத்தில் வழங்கப்படும் சேவைகளே இதற்குக் காரணம் எனக் கூறியுள்ளது.

1990க்கும், 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், இந்த இறப்பு விகிதம் 77 விழுக்காடு குறைந்துள்ளது எனக் கூறியுள்ள WHO நிறுவனம், இந்த எண்ணிக்கை குறைந்துள்ள மாநிலங்களாக, கேரளா, மகாராஷ்டிரா, தமிழகம் என வரிசைப்படுத்தியுள்ளது.

கருவுற்ற பெண்களுக்கு வழங்கப்படும் சேவைகள், 2005ம் ஆண்டிலிருந்து இருமடங்கு அதிகரித்துள்ளது எனவும், உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : IANS /  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.