2018-06-06 13:55:00

இமயமாகும் இளமை.........: வியக்க வைக்கும் சிறு வயது சாதனைகள்!


ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் ஒரு மிகப்பெரிய சக்தி இருக்கிறது. அதனை வெளியே கொண்டுவர வேண்டியது பெற்றோர்களின் கடமை. இதோ, மூன்று எடுத்துக்காட்டுகள்.

ஜெய்ப்பூரை சேர்ந்த இலட்சி பிரஜாபதி என்ற மாணவி, தனது ஒன்பது வயதிலேயே ‘sit a while with me’ என்ற நூலை எழுதி, இளம் இலக்கியவாதி என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.

I.Q. தரநிலை 225 என்றால், நம்ப முடிகிறதா? நம்பத்தான் வேண்டும். ஏனெனில், சிறுமி விசாலினி படைத்துள்ளது உலக சாதனை. கின்னஸ் சாதனையாளரான கிம்-யுங்-யோங்கின் (Kim Ung-Yong) I.Q. அளவான 210 என்பதைவிட, இது இன்னும் அதிகம். இவர் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர். பொறியியல் படிப்பு முடித்தவர்கள் எழுத வேண்டிய எம்.சி.பி., மற்றும் சி.சி.என்.ஏ., தேர்வுகள் உட்பட, ஏழு தேர்வுகளை எழுதி, சாதனை படைத்துள்ளார் விசாலினி.

இனியன் என்ற மாணவன், ஓர் இளம் செஸ் சாம்பியன் ஆவார். இவர் 2002ம் ஆண்டு பிறந்தவர். இவர் 14 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான காமன்வெல்த் போட்டிகளில் செஸ் சாம்பியன்ஷிப்பை கடந்த 2016ம் ஆண்டு பெற்றுள்ளார். மேலும், தனது 14வது வயதில் அகில உலக அளவில் மாஸ்டர் பட்டத்தையும் வென்றுள்ளார் இனியன். அதுதவிர 33 முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ள இவர், ஈரோடு மாவட்டத்தைச் சார்ந்தவர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©.